2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மின்சார சபை ஊழியரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களைக் கடமை செய்ய விடாது தாக்கிக் காயப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்துக்கு,  மின்சார சபை ஊழியர்கள் கடமையின் பொருட்டு சென்றிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று கண்மூடித்தனமாக தாக்கியதில், ஆறு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் சிலரை தொடர்ச்சியாக கைது செய்திருந்த போதிலும் பிரதான சந்தேகநபரை கைது செய்திருக்கவில்லை. எனவே மின்சாரசபை ஊழியர்கள் பிரதான சந்தேக நபரை கைது செய்யுமாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிரதான சந்தேக நபர் தனது சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று சரணடைந்திருந்தார்.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .