2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மன்னாகண்டலில் மரக்கடத்தல்: பொலிஸார் துப்பாக்கிசூடு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் காட்டுப்பகுதியில், சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட கப் வானம் ஒன்றை பொலிஸார் மறித்த வேளை, தப்பிசெல்ல முற்பட்டபோது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், நேற்று முன்தினம் (02) இரவு இடம்பெற்றுள்ளது.

மரக்கடத்தல்காரர்கள் வாகனத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார், அங்கு அறுக்கப்பட்டிருந்த முதிரை மரக்குற்றிகளையும் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மரக்குற்றிகள், சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடையது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .