Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்துக்கு, நேற்று (05) திடீர் விஜயம் மேற்கொண்டடிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அதனடிப்படையில், மன்னார் - பேசாலை கிராமத்துக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேசாலை புனித வெற்றிநாயகி தேவாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதேவேளை, பேசாலை கிராமத்தில் உள்ள மீனவ அமைப்புகளின் சகல பிரதிநிதிகளையும் சந்தித்து அமைச்சர் கலந்துரையாடினார்.
இதன்போது, பேசாலை பகுதியில், யுத்த காலத்தின் போது அழிக்கப்பட்ட படகுகளுக்கான நட்டஈடுகள் எவையும் வழங்கப்படவில்லையென, மீனவ சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
மக்கள், மீனவர்கள் ஆகியோர் முன்வைத்த கருத்துகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னை நம்பி வந்த மக்களைத் தான் ஒரு போதும் கை விடுவதில்லையெனத் தெரிவித்தார்.
எனவே, மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, நிவர்த்தி செய்வதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago