2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் நிவாரணம் சேகரிப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 மே 31 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இலங்கையில் தற்போது நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையூடாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணச் சேகரிப்புக்கு, மன்னார் மாவட்ட மக்களும் பூரண ஆதரவு வழங்கவேண்டும்” என, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார்க் கிளைத் தலைவர் ஜே.ஜே.கெனடி தெரிவித்தார்.

“தென்பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்தங்கள் காரணமாக, 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மன்னார் ஆயர் இல்லம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார்க் கிளை, மன்னார் வாழ்வுதயம் ஆகியவை இணைந்து, மன்னார் மாவட்டத்திலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .