2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மனமுடைந்த காதலன் மாத்திரையை விழுங்கினார்

George   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயம் கபிலன்

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில, சந்தேகநபர் ஒருவர், ஒரு வகை மாத்திரையை விழுங்கி ஆபத்தான நிலையில், தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அளவெட்டி கிழக்கு பகுதியினை சேர்ந்த 25வயதுடைய இளைஞன், அப்பகுதியினை சேர்ந்த யுவதியை  9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

பெண்ணின் தாயரிடம் தமது காதலை தெரியப்படுத்திய இளைஞன், யுவதியை திருமணம் செய்து தருமாறு கோரியுள்ளார். இதற்கு யுவதியின் தாய் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வெளிநாட்டுக்குச் சென்று இளைஞன்  தொழில்புரிந்துள்ளார்.

உழைக்கும் பணம் எல்லாவற்றையும் யுவதியின் வீட்டுக்கு அனுப்பிய இளைஞன், யுவதியின்  பொருளாதார நிலை உயர்வடைய உதவியுள்ளார்.

கடந்த 5வருடங்களாக வெளிநாட்டில் உழைத்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்காக  திரும்பி வந்துள்ளார்.

எனினும், யுவதியின் தாய், இளைஞனின் தம்பியுடன் யுவதியை சேர்த்து வைத்துள்ளார். இச் சம்பவம் இளஞனுக்கு தெரியவந்ததை அடுத்து, ஆத்திரத்துடன் வீட்டுக்கு சென்றவர், யுவதியின் தாயுடன் வாக்குவாதப்பட்டதுடன் கண்ணாடிகளை அடித்த உடைத்துள்ளார்.

அதனையடுத்து, கண்ணாடியை சேதமாக்கிய குற்றச்சாட்டில், இளைஞன்,  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--