2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

மன்னார் அரச சுற்றுலா விடுதி திறந்து வைப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
 
உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்குச் சொந்தமான மன்னார் அரச சுற்றுலா விடுதி, புதன்கிழமை (21) மாலை, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானும் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன், சர்வமதத் தலைவர்கள், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--