2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மன்னாரில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் காயம்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், இருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த காரொன்று, இன்று மாலை 2.30 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து, தோட்டவெளி 5ஆம் கட்டைச் சந்தியில் விபத்துக்குள்ளானதில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்தில், குறித்த காரை ஓட்டிச் சென்ற கொழும்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 37) என்பவரே, காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் வங்காலை சந்திக்கு சற்றுத் தொலைவில், மன்னார் சதொச விற்பனை நிலையத்துக்கு  பொருட்களை ஏற்றி வந்த லொறியொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .