2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

‘மறு அறிவித்தல் வரும் வரை அனைத்தையும் மூடுங்கள்’

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், க. அகரன், செ.கீதாஞ்சன்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களையும் முன் பள்ளிகளையும், மறு அறிவித்தல் வரும் வரை  உடனடியாக மூடுமாறு, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் வேண்டுகோள்விடுத்தார்.

கோரானா வைரஸ் தாக்கம் காரணமாக, கல்வி அமைச்சால் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலை​யிலேயே, தவிசாளரால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மாணவாகர்கள், இளைஞர்கள் கூடக்கூடிய கல்வி சார் செயற்பாட்டு இடங்களையும் மூடுமாறும் விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துமாறும், வவுனியா நகரசபை தவிசாளர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளுக்கும் மாவட்ட செயலகம்  தடை விதித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .