2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மாவீரர் நினைவேந்தலுக்கு பிரஜைகள் குழு அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்டத் தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு, வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில், புதன்கிழமை (27) நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது, மாவீரத் தெய்வங்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் கோவில் மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்படுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் உறுதியுரை கீதம் இசைக்கப்பட்டு, மாலை 6 மணி 5 நிமிடத்தில், மாதிரி கல்லறைகளுக்கு முன்பாக, பொதுச்சுடர் ஏற்றப்படுமெனவும் கூறினார்.

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்படாத நிலையில், வவுனியா நகரத்தில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார்.

தவிர்க்க முடியாத காரணங்களால், இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதவர்கள், புதன்கிழமை (27) மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு, தத்தமது வீட்டு வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி, அஞ்சலி செலுத்துமாறும், அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .