2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மாணவன் துஷ்பிரயோகம்: அலுவலக உதவியாளர் கைது

George   / 2016 ஜூலை 12 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

7 வயதுடைய பாடசாலை மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை அலுவலக உதவியாளர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்த பின்னர், மேலதிக வகுப்புக்கு செல்லும் போது, மாணவனை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னரும் பல சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பளை, மருதங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .