2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகளில் 7 பேர் விடுவிக்கப்பட்டனர்

Gavitha   / 2016 மார்ச் 31 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர், நேற்றுப் புதன்கிழமை (30), அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 46 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த  நிலையில், அவர்களில் 7 பேர், நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனைய 39 பேரும் தொடர்ந்து புனர்வாழ்வு பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.

பூந்தோட்டம் புனர்வாழ் நிலையப் பொறுப்பதிகாரி கேணல் ஏ.ஆர்.ஹெமிடோன் தலைமையில், இவர்கள் எழுவரையும் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .