Niroshini / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
“மாற்றாற்றல் கொண்டவர்களை நாம் இறக்கத்துடன் அனுகுவதை விட அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள பிரஜைகளாக மாற்றி அவர்களை முன்னேற்ற அனைவரும் முன் வர வேண்டும்” என வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
சர்வதேச மாற்றாற்றல் கொண்டோர் தினத்தையொட்டி, மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை(9) மாலை சர்வதேச மாற்றாற்றல் கொண்டோர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மாற்றாற்றல் கொண்டவர்கள் தொடர்பில் அவர்களை அனுகும் முறை, அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டிய சமூக உதவித் திட்டங்கள் வடக்கில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையை காணக்கூடியதாக உள்ளது.
மாற்றாற்றல் கொண்டவர்களுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் அவை அமுல்படுத்தப்படவில்லை.
அவர்களை நாங்கள் இறக்கத்துடன் உற்று நோக்குவதை விட, அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ள பிரஜையாக மாற்றி அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நாங்கள் அவர்களை மாற்றி அமைக்க வேண்டும். அவர்களின் முன்னேற்றத்துக்கான பாதையை நாம் வழிவகுத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.
15 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago