2021 ஜனவரி 27, புதன்கிழமை

யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – கல்மடுநகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தினமும் ஏற்படும் யானைத் தாக்கத்தைத் தடுக்கும் வகையில், ஆறு கிலோமீற்றர் நீளமான யானை வேலி அமைத்து தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்மடுநகர், நாவல்நகர், றங்கன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடரும் காட்டுயானைகளின் தொல்லையால் மேற்படி கிராம மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களையும் உயிராபத்துகளையும் எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது, அன்றாடம் இரவு வேளைகளில் காட்டுயானைகள் ஊர் மனைகளுக்குள் புகுந்து பெரும் அழவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு யானைகளால் தினமும் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி அண்மையில் யானைகளால் அழிக்கப்பட்ட பயிர்களை எடுத்து வந்து கண்டாவளைப் பிரதேச செயலகம் முன்பாகவும் மாவட்டச் செயலகம் முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால், இதுவரை எந்த தீர்வுகளும் இல்லை என குறிப்பிட்ட பிரதேச மக்கள் தமது பிரதேசத்தை யானைத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்குமாறும் அதற்கு ஏற்ற வகையில் தமது கிராமங்களை அண்மித்த காட்டுப்பகுதிகளில் ஆறு கிலோமீற்றர் நீளமான யானை வேலிகளை அமைத்துத்தருமாறு கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .