2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

“இன்ஸ்டாகிராம் ஆசையால் விபரீதம்”: 17 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்

Editorial   / 2025 நவம்பர் 20 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 முடித்த மாணவி ஒருவர், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிய இளைஞரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

அங்கு, அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஒரு தனியார் விடுதியில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாகவே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அந்தச் சிறுமியை, இன்ஸ்டாகிராம் காதலன் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். விடுதியில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த பின், மறுநாள் காலையில் சிறுமியை அவரது ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டு அந்த இளைஞர் தப்பியோடி விட்டார்.

வீட்டிற்குச் சோர்வுடன் திரும்பிய மகளிடம் தாய் விசாரித்தபோது, தனக்கு நடந்த கொடூரத்தை மாணவி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் அளித்த புகாரின் பேரில், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X