2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

'யுத்தத்தின் பாதிப்புகள் கிளிநொச்சியில் அதிகம்'

George   / 2016 மார்ச் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'யுத்தத்தின் பாதிப்புகள் வடக்கு - கிழக்கில் அதிகளவு பெண்களை பாதித்துள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் அதன் பாதிப்பு மேலும் அதிகமாக  காணப்படுகிறது. அதனால்தான் இந்த மாவட்டத்தில் 7,061 பெண் தலைமைத்துவ குடும்பங்களும்,1,460 மாற்று வலுவுள்ள பெண்களும் காணப்படுகின்றனர்' என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதே பெண்கள் தினத்தை  முன்னிட்டு பால்நிலை சமத்துவத்துக்கான முன்னெடுப்பு எனும் கருப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இன்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

எனவே, வன்முறைகள் அற்ற பெண்களுக்கான சூழல் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். அத்தோடு அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க ஆண்கள் அணிதிரள வேண்டும்' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டுறவாளர் மண்டபத்தை இடம்பெற்ற இந்நிகழ்வில், மேலதி அரசாங்க அதிபர், மேலதிக மாவட்டச் செயலாளர், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்  அதிகாரிகள்,பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன்  பல்வேறு முயற்சிகளில் சிறந்த பெண்களாக தெரிவு செய்யப்பட்வர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .