2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தேக்கவத்தை பகுதியில், நேற்று (05) இரவு, ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர், வவுனியா - கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (வயது 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையென அடையாளங்காணப்பட்டு உள்ளார். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலுடனேயே, குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளார். 

இது குறித்து, வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இவ்விபத்தால், சில மணிநேர தாமதத்தின் பின்னரே, குறித்த ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--