2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

றங்கன் குடியிருப்பு மக்களுக்கு வீட்டுத்திட்டம்

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்மடுநகர் றங்கன் குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறி வசித்து வரும் குடும்பங்களில் சில குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட வீடுகள் இதுவரை கிடைக்கவில்லை.  இதனால் கடந்த ஐந்து வருடங்களாக தற்காலிக வீடுகளில் பெரும் சிரமங்களில் மத்;தியில் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இந்தக் குடியிருப்பில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகள் இதுவரையில் கிடைக்கவில்லை.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட தற்காலிக வீடுகளில் இவர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர். தற்காலிக வீடுகள் மிகமோசமாக சேதமடைந்;து காணப்;படுவதுடன் பாம்பு மற்றும் விச ஜந்துக்களின் பாதிப்புக்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

கடந்த வாரம் பெய்த மழையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தமக்கு இவ்வாண்டிலாவது நிரந்தர வீடுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இக்கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்த வீதிகளும் புனரமைக்கப்படாமல் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதுடன் சில வீதிகள் வெள்ளநீர் அடித்துச் செல்லப்பட்டு ஆறுகள் போன்று காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .