2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

’வேகமாக வேலைகள் முன்னெடுக்கப்படவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அக்கராயனில் மதகு அமைப்பதற்கு வீதியின் நடுவே குழிகள் வெட்டப்பட்ட போதும் வேலைகள் வேகமான முன்னெடுக்கப்படவில்லை என அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

அண்ணாசிலையடிச் சந்தியில் இருந்து அணைக்கட்டு வீதி நோக்கிச் செல்லும் வீதியில் மதகு அமைப்பதற்கென குழிகள் வெட்டப்பட்டு பத்து நாள்கள் கடந்தும் வேலைகள் தொடங்கப்படவில்லை எனவும் கரைச்சி பிரதேச சபையால் குறித்த மதகு அமைப்பதற்கென வேலைகள் தொடங்கப்பட்ட போதிலும், வீதியின் நடுவே கற்கள் குவிக்கப்பட்டு குழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்படாததன் காரணமாக, போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொது மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக, அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--