2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

விண்ணப்பங்கள் கோரல்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்  

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால், 2020க்கான விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடந்தோறும்  வழங்கப்படுகின்ற   விருதுகளுக்கான  விண்ணப்பங்கள் 2020க்கும் கோரப்பட்டுள்ளன.

எனவே, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொருத்தமான கலைஞர்கள்  கீழ் குறிப்பிடப்படும் விருதுகளுக்குரிய  விண்ணப்பங்களை,  பிரதேச செயலகத்தில் பெற்று, அதனை பூரணப்படுத்தி வழங்குமாறு, கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில்  பண்பாட்டலுவலகள் திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள கலை இலக்கிய மன்றங்களுக்கான ஆக்கத்திறன் போட்டி 2020, வடமாகாண  அமைச்சு திணைக்களங்களில்  பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கதிறன்  போட்டி, கலைக்குரிசில் போட்டி 2020, இளங்கலைஞர் விருது 2020,  சிறந்த நூல்  பரிசு தேர்வு 2020, நூல் கொள்வனவு 2020, நடுவர் தெரிவு 2020 போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் யாவும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் கரைச்சி பிரதேசத்துக்குள் வசிக்கின்ற கலைஞர்கள் பிரதேச செயலகத்தில் கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்குமாறும் மேலதிக விவரங்களுக்கு பிரதேச செயலக கலாசார பிரிவை தொடர்பு கொள்ளுமாறும், கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X