Editorial / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, ஐயன்கன்குளம் வைத்தியசாலை மிகவும் பின்தங்கிய பிரதேச வைத்தியசாலையாகக் காணப்படுவதனால், நிரந்தரமான வைத்தியரை நியமிப்பதில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஐயன்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு, வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு, பிரதேச மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகின்ற போதும், இதற்கான வைத்தியர் எவரும் இதுவரை நியமிக்கப்படாதநிலை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இங்குள்ள மக்கள் தமக்கான மருத்துவ தேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், இவ்வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர்காவு வண்டியும் பழைய நோயாளர் காவு வண்டியாகவே காணப்படுகின்றமையினால், அவற்றை மாற்றித்தரவும் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போதும், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச பொதுஅமைப்புக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
15 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 Nov 2025
23 Nov 2025