Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - துணுக்காய் - அம்பலப்பெருமாள்குளத்தின் வான் பகுதியைப் புனரமைக்குமாறு, இக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலபோகத்தில் 500 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் ஆண்டுதோறும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் இக்குளத்தின் வான்பகுதி, தற்போது சேதமடைந்து காணப்படுகின்றது.
துணுக்காயில் இருந்து அக்கராயன் வரையான போக்குவரத்துகள் இவ்வான்பகுதி ஊடாகவே நடைபெறுகின்றது. சுமைகளுடன் செல்லும் பாரவூர்திகளினால் வான்பகுதி சேதமடைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
2010ஆம் ஆண்டில் இவ்வான்பகுதி புனரமைக்கப்பட்ட போதிலும் சுமைகளுடன் பாரவூர்திகள் பயணிப்பதன் காரணமாக, வான்பகுதி கட்டுமாணங்கள் சேதமடைவதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், குறித்த வான்பகுதியைப் புனரமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago