2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

விபத்தினைத் தடுக்க தவறியவருக்கு மறியல்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அதிவேகமாக முச்சக்கரவண்டியினை செலுத்தி விபத்தினை ஏற்படுத்த காரணமாயிருந்த முச்சக்கரவண்டி சாரதியினை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நளினி கந்தசாமி நேற்று(10) உத்தரவிட்டார்.

வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த சாரதிக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது. முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் (09) தொண்டமனாறு சந்தி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த தாய் மகன், மற்றும் பாட்டி ஆகியோர் காயமடைந்ததுடன், இதில் சிறுவன் பலத்த காயங்களுக்குள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த முச்சக்கரவண்டி சாரதியினை நேற்று(10) பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X