2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வரலாற்றுச்சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறீதரன் எம்.பி புகழாரம்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றெடுத்துள்ள, கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் வீரர்கள் தமது பாடசாலைக்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வரலாற்றில் இன்றளவும் இல்லாத பெரும் சாதனைத் தடம் இதுவாகும். துடுப்பாட்டம் என்பது தென்னிலங்கையர்களுக்கே உரித்தான விளையாட்டு என்னும் மனோபாவத்தை உடைத்தெறிந்து கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாடசாலை தென்னிலங்கையின் தேசியப் பாடசாலைகளை வீழ்த்தி தேசியமட்டத்தில் வெற்றிவாகை சூடியிருப்பதை ஒரு வரலாற்றுப் பதிவாகவே என்னால் பார்க்க முடிகின்றது.

இந்த மண்ணுக்கும் மாவட்டத்திற்கும் வரலாற்றுச்சாதனை ஒன்றின் மூலம் பெருமை தேடித்தந்துள்ள கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், பாடசாலைச் சமூகத்திற்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் பல வெற்றிகளைப் பெற்று இந்த மண்ணிற்கும், எமது மாவட்டத்திற்கும் கௌரவத்தைத் தேடித்தர வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் இன்றையதினம் (11) நடைபெற்ற 'தேசிய ரீதியிலான துடுப்பாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில்' கலந்து கொண்டு உரையாற்றும் போது கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ.சிவஞானம் சிறீதரன் அவர்கள்  குறிப்பிட்டிருந்தார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X