2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வெள்ளிப்பதக்கம் பெற்ற பெண்ணுக்கு சைக்கிள் அன்பளிப்பு

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

தேசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற குடும்ப பெண்ணுக்கு சைக்கிள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரெத்தினம் திருக்குமார் தனிப்பட்ட உதவியாக 2 இலட்சத்து என்பதாயிரம் ரூபாய் அன்பளிப்பு மூலம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 2019 ம் ஆண்டு 45 வது தேசிய விளையாட்டு விழாவில் சைக்கிலேட்ட போட்டியின் 2ஆம் இடம் பெற்று (வெள்ளிப் பதக்கம்)  முல்லைத்தீவு மாவட்டத்தின் முதல் தடைவையாக பெற்று மாவட்டத்துக்கும் மற்றும்  மாகாணத்துக்கும் பெருமை சேர்த்த   முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையை சேர்ந்த நந்தீஸ்வரன் ராதிகா என்ற பெண்ணுக்கே, இந்த ரேசிங் சைக்கிள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .