2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வவுனியாவில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Editorial   / 2019 நவம்பர் 08 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட உண்டியல் உடைத்து,  அதிலிருந்த பெருமளவு பணத்தை, திருடர்கள் நேற்று(7) திருடிச் சென்றுள்ளனர் என்று, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிலைத் திறந்து பாடலை ஒளிபரப்புவதற்காகச் கோவிலுக்குச் சென்ற கோவில் நிர்வாகப் பொருளாளர், கோவிலிலுள்ள  உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன், கோவில் தலைவர், செயலாளருக்கு குறித்தத் தகவலை வழங்கியுள்ளார்.  

இந்நிலையில் இவ்வியடம் குறித்து கோவில் தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தக் கோவிலின் உண்டியல் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை திருடர்கள் கைதுசெய்யப்படவில்லை என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .