க. அகரன் / 2017 ஜூலை 16 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}







வவுனியாவில் 28ஆவது வீர மக்கள் தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஏற்பாட்டில், வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கழகத்தின் கொடியை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான த. சித்தார்த்தன் ஏற்றியிருந்ததுடன் ஈகைச்சுடரினையும் ஏற்றியிருந்தார்.
தொடர்ந்து, உமாமகேஸ்வரனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் இறந்த போராளிகளுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில், வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், க. சிவநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
41 minute ago
49 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
4 hours ago
6 hours ago