2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

வீதிக்கு குறுக்காக சரிந்து கிடக்கும் மின் கம்பம்

George   / 2016 மே 22 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி அறிவியல் நகர் வீட்டுத்திட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் குறுக்கே மிக ஆபத்தான நிலையில் காணப்படும் மின் கம்பத்தினை அகற்ற ,துவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 50 வீட்டுத்திட்டம் மற்றும் அறிவியல் நகர் குடியிருப்பு வன ஜீவராசிகள் திணைக்களம் மத்திய வங்கியின் வடமாகாண அலுவலகம் ஆகியவற்றுக்குச் செல்லும் பிரதான வீதிக்கு குறுக்காக மிக ஆபத்தான நிலையில் மின்கம்பம் சரிந்து காணப்படுகின்றது.

மின் கம்பத்தினை அகற்றுவதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சரிந்து

கிடக்கும் மின்கம்பத்தை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .