2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

வீதியை திருத்தித்தரக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 25 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வவுனியா

வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்துக்கான பிரதான வீதியை திருத்தித் தருமாறு கோரி ஏ-9 வீதியை வழி மறித்து இன்று வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இதன்போது பேரணியாகச் சென்ற மக்கள், வவுனியா மணிக்கூட்டுக் கோபுரப்பகுதி மற்றும்; வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இக்குடியேற்றக் கிராமத்துக்கான பிரதான வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமையால், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .