Menaka Mookandi / 2016 ஜூலை 22 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சங்குப்பிட்டடி வீதியில் வியாழக்கிழமை (21) இரவு இடமபெற்ற வீதி விபத்தில், இருவர் உயிரிழந்ததுடன் ஒருவரின் சடலம் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரே உயிரிழந்துள்ளனர்.
இரவு வேளை வீதியால் சென்றோர், சடலம் ஒன்று வீதியில் உள்ளதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர். எனினும், மற்றைய சடலம், இரவு வேளை ஆகையால் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. எனினும், வெள்ளிக்கிழமை (22) காலை கடலில் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிளிநொச்சி நீதவான் ஏ.ஆனந்தராஜாவின் உத்தரவுக்கமைய மீட்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதிரவேலு கவிராஜ் (வயது 25) என்பவரது என அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கோண்டுள்ளனர்.
15 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
1 hours ago