2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

‘வி.ம.பேரவையுடன் டெனிஸ்வரன் இணைந்து போட்டி’

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் த. இ . மலரவன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள் மக்கள் போரவை, வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடுவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், வேட்பாளர் தெரிவு இடம்பெற்று வரும் நிலையில், பா. டெனிஸ்வரனும், தமது கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், வவுனியாவைச் சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவருடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றனவெனவும், அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .