2021 ஜனவரி 16, சனிக்கிழமை

கல்வீரங்குளத்தில் 03 கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் 03 கிளைமோர் குண்டுகள்  நேற்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை இன்று வெள்ளிக்கிழமை மீட்கவுள்ளதாக  வவுனியா விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கல்வீரங்குளத்திலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயி ஒருவர்,  குளத்தினுள் பாசிப்புதர்களுக்குள் கிளைமோர் குண்டுகள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார்,  தேடுதல் நடத்தியதில்  03  கிளைமோர் குண்டுகளும் அதனை வெடிக்க வைப்பதற்கான கருவிகளும் இருப்பதைக் கண்டுள்ளனர்.

எனினும், இவற்றை  மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும், இரவாகியதால் குளப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இவை மீட்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .