Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
1990ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்த விடத்தல்தீவு மற்றும் பெரியமடு கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
புத்தளம் ,பாலாவி, தில்லையடி, கரம்பை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த மக்களே கிராமங்களுக்கு மீள்குடியேற்றத்துக்காக நேற்று திங்கட்கிழமையம் இன்று செவ்வாய்க்கிழமையும் மீள்குடியேறுவதற்காக புறப்பட்டு சென்றனர்.
20 பஸ் வண்டிகளில் புறப்பட்டுச் சென்ற இம்மக்களுக்கு புத்தளத்தில் வழங்கப்பட்டிருந்த பதிவுகள் நீக்கப்பட்டு விடத்தில்தீவு மற்றும் பெரியமடு கிராம அதிகாரி பிரிவில் இவர்களது பதிவுகள் இன்று முதல் உள்ளீர்க்கப்படவுள்ளது.
இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் தங்களுக்கு காணி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .