2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மழையால் வவுனியாவில் 11,141 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக  பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 11,141 குடும்பங்களைச் சேர்ந்த 39ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச அதிபர்  தெரிவித்தார்.

5509 வீடுகள்  சேதமடைந்துள்ளதாகவும் . பயிர்செய்கை 8825 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நெடுங்கேணி பிரிவிலேயே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.

வவுனியாவிலிருந்து செட்டிகுளத்திற்கான வீதி தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதால், செட்டிகுளம் மெனிக்பாம் நிவாரண கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிய பஸ்கள் மன்னார் வீதி, பம்;பைமடு - ஆலங்குளம், மதவாச்சி வீதி வழியாகவே  செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--