2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு விழா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 144 ஆவது ஆண்டு சேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆண்டு விழா இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

மன்னார் பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கு தலைமையில் இடம்பெற்ற விழாவில், கொடிகள் ஏற்றப்பட்டு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதோடு உயிர்நீத்த பொலிஸ் வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததோடு உயிர் நீத்த பொலிஸாரின் பெற்றோரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் பெரியகடை சனசமூக நிலையத்தில் மன்னார் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வில் பல பொலிஸார் காத்துக் கொண்டு இத்தினத்தில் இரத்ததானம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .