2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இந்திய மீனவர்கள் 17 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் கடற்பரப்பில் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தியபோது, இவர்களை  எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

கடந்த 28ஆம் திகதி  மேற்படி  மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில்,  கடந்த 30ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இவர்களை இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம்  உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .