2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர்முகாமைத்துவ அமைச்சினால் ரூ. 18 மில்லியன் நிதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இடர்முகாமைத்துவ அமைச்சு 18 மில்லியன் ரூபாவை அனுப்பிவைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திலிருந்து மாவட்ட செயலகத்திற்கு இறுதியாக கிடைத்த அறிக்கையின்படி, கடந்த ஒரு வாரகாலமாக பெய்த மழையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் 11,291 குடும்பங்களைச் சேர்ந்த 39,582  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நெடுங்கேணி பிரிவில் 26 சிறுகுளங்கள் சேதமடைந்துள்ளன.  அத்துடன், இங்கு 56 கிலோமீற்றர்  நீளமான வீதிகளும் போக்குவரத்து செய்யமுடியாதளவிற்கு வெள்ளத்தினால் மூழ்கியதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டார்.

வெள்ள நிலைமை  குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுவது பற்றியும் ஆராயும் உயர்மட்ட மாநாடு அரச அதிபரின் தலைமையில், நாளை  வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும்  சகல பிரதேச செயலாளர்கள், சமூகசேவை அலுவலர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--