2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியாவில் மழை; 189 குடும்பங்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையால் 189 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளளன.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 167 குடும்பங்களை சேர்ந்த 637 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக அப்பிரதேச செயலாளர் கமலகுமார் தெரிவித்தார்.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த கிஸ்தவகுளம், ஆண்டியாபுளியங்குளம், கந்தசாமி நகர், முதலியார்குளம் ஆகிய கிராம மக்களே மழையால் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் 7 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண உதவிகள் பிரதேச செயலகத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மழையால் 22 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வவுனியாவிலுள்ள புதுக்குளம் மற்றும் அயில்குளம் உடைப்பெடுத்துள்ள நிலையில் அவற்றை சீர்செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.  அத்துடன், தாண்டிக்குளம் குளமும் உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி கமக்காரர் அமைப்பு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .