Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் கட்டப்பட்ட 50 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் வைபவம் எதிர்வரும் சனிக்கிழமை புளியங்குளம் பிரிவிலுள்ள பெரியகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.
ஒரு சர்வதேச அரசசார்பற்ற அமைப்பின் உதவியை பெற்று இராணுவ நலன்புரி நிலையத்தின் 56ஆவது படைப்பிரிவினரால் வீடுகள் அமைக்கப்பட்டது. மீளக்குடியேறிய வறுமைக்கோட்டின் கீழுள்ள தெரிவுசெய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ-ஏ-சந்திரசிறி, அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண, வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி-எம்-எஸ்-சாள்ஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago