Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஒத்துழைப்பும் அனுசரணையும் வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திருமதி க்ரிஸ்டின் ரொபிக்ஹன் பிரதமர் டீ.எம்.ஜயரத்னவை நேற்று சந்தித்தபோது தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசாங்கம் ஏற்கனவே வட கிழக்கு பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துகிறது. மின்சாரம், பாதைகள் மற்றும் குடிநீர்த் திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த
300,000 பேருக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் ஏ ௧5 திருகோணமலை மட்டக்களப்பு பாதையில் ஐந்து பாலங்களை அமைக்கும் திட்டமும் ஏற்கனவே மேற்கொள்ளப்படுகிறது.
வட மாகாணத்தில் 50 நடுத்தர பாலங்ககை அமைக்கும் திட்டமும் அமுல்படுத்தப்படுவதாக பிரான்ஸ் தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெறிவித்த பிரதமர் டீ.எம். ஜயரத்ன
வட கிழக்கு மாகாணங்களுக்காக பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அப்பிரதேசங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார்.
15 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
29 minute ago