2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வவுனியா வீதி விபத்தில் யுவதி பலி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா அரசினர் வைத்தியசாலைக்கு முன்பாக ஏ- 9 வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.

இவர் வவுனியாவில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும்  நடேசலிங்கம் லோஜனி (வயது 23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவர் ஏ - 9 வீதியால் தனது துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தப்போது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

தலைநசிந்து யுவுதி மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--