Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மார்க் ஆனந்)
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் மன்னார் கச்சேரி கேட்போர் கூடத்தில் இன்று காலை 09:50 மணியளவில் ஆரம்பமாகியது.
இதில் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன், மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடமாகண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அரச அரசசார்பற்ற திணைக்களங்களின் தலைவர்கள், முப்படை அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
மன்னார் மாவட்டத்தில் நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி இதில் ஆராயப்பட்டது.
இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார், மடு, முசலி, நானாட்டன், மாந்தை ஆகிய பிரதேச செயலாளர்கள், ஏனைய சகல திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டு தங்கள் திணைக்கள பிரச்சினைகளையும் அதற்கான திட்ட முன்மொழிவுகளையும் சமர்பித்தார்கள்.
இதில் ஜனாதிபதி துரித செயலகத்தில் இருந்து சந்திரா பெர்னாண்டோ கலந்து கொண்டார்.
மீள்குடியேற்றம்,அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டதுடன், அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .