Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
வவுனியாவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற பலருக்கு ஆறாயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை நீதிமன்றினால் நேற்று திங்கட்கிழமை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்திய அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டது என நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியாவில் மகாஇறம்பைக்குளம், தரணிக்குளம், சாந்தசோலை, தீருவகம, அலகல்ல, மகாகச்சகொடி, கிராமங்களைச் சேர்ந்தவர்கள் களவாக மின்சார இணைப்பினை ஏற்படுத்தியிருந்தனர் என்பது மின்சாரசபை அலுவலர்களுடைய திடீர் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு தொகை அபராதத்தினை செலுத்திய பின்னர் மிகுதி பணத்தை பகுதி பகுதியாக செலுத்த நீதிமன்றம் இவர்களுக்கு அவகாசம் வழங்கியுள்ளது.
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago