2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சாந்தபுரத்தில் இரவு பகலாக மிதிவெடியகற்றும் படையினர்

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)
கிளிநொச்சி- சாந்தபுரம் பகுதியில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பகுதிகளில் மிதிவெடியகற்றும் பணிகளில் படையினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவுபகலாக ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 281 குடும்பங்களை மீள்குடியேற்றுவதாகக் கூறி அழைத்து வந்த போதும், சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திலேயே அவர்கள் தொடர்ந்தும் தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களது வசிப்பிடங்களில் இன்னமும் வெடிபொருள்கள் அகற்றப்படவில்லை என்பதாலேயே மீள்குடியமர்வு தாமதமாவதாகவும் கூறப்பட்டது.

மிகக்குறுகிய பாடசாலை வளாகத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்கியிருப்பதாலும், அண்மையில் வன்னிப்பகுதியில் பெய்த பெருமழையாலும் சாந்தபுரம் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டிருந்தனர். தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டிருந்தது.

இதனால் சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்தும் படி இந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சாந்தபுரத்தில் வெடிபொருள்கள் அகற்றப்படாதிருந்த பகுதிகளில் கனரக வாகனங்களின் உதவியுடன் படையினர் மிதிவெடிகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் இரவு வரை ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .