Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
சாந்தபுரம் புதுக்குடியிருப்பு பகுதிகளைப் போலவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஏனைய பகுதிகளிலும் மக்களை விரைவில் மீள்குடியமர்த்த படைத்தரப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்று கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத் தளபதி சந்தன ராஜகுரு தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.
மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்:
இயல்பு நிலை தோன்றிய பின்னரும் முகாம்களிலேயே குறித்த தொகையிலான மக்கள் தங்கியிருப்பது படையினருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மக்கள் கண்ணிவெடியற்ற பாதுகாப்பான பிரதேசங்களில் வாழ்வதை உறுதிப்படுத்தவேண்டிய நிலையில் குறித்த சில பகுதிகளில் மக்கள் உடனடியாக மீள்குடியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மழைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மீள்குடியேற்றம் இடம்பெறவேண்டிய பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு மக்கள் வசிக்க அனுமதிக்கப்பவர் என்றும் அவர் தெரிவித்தார்.
24 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
2 hours ago