2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

விசுவமடு மேற்கில் நேற்று மீளக்குடியேறிய மக்களைச் சந்தித்தார் சரவணபவன் எம்.பி.

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் விசுவமடு மேற்குப்பகுதியில் நேற்று மீள்குடியேற்றம் நடைபெற்றது.

விசுவமடு மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் நேற்று தங்கள் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

இவர்களுக்குத் தற்காலிக வீடுகளை அமைக்க ஐ.ஓ.எம். நிறுவனத்தால் 2 தறப்பாள்கள் வழங்கப்பட்டன. 19 கிராம சேவகர் பிரிவைக் கொண்ட புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் நடைபெற்ற முதலாவது மீள்குடியேற்றம் இதுவாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மீளக்குடியேறிய மக்களுடன் கலந்துரையாடியதுடன், பிளாஸ்ரிக் வாளிகளையும் வழங்கினார்.

இந்தப் பகுதிதான் யுத்தம் தீவிரமயடையத் தொடங்கிய பகுதி. இங்கு தீவிரமடைந்து மக்களைத் துன்பப்படுத்தத் தொடங்கிய யுத்தம், பின்னர் மோசமான நிலையை அடைந்தது. இங்கு ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம். அவற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. எனினும் நம்பிக்கையுடன் புதிய வாழ்வைத் தொடங்குவோம் - என்று மீள்குடியேறிய மக்களுக்கு சரவணபவன் எம்.பி. ஆறுதல் வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .