2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிணற்றில் கிரனேட்டுகள்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜித்தன்)

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் கிணறு துப்புரவு செய்யப்படவேளை கிணற்றில் இருந்து 30 கிரனேட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதிகளில் மீள்குடியேறியுள்ள மக்கள் தமது கிணற்றை இறைத்துச் சுத்தப்படுத்தியபோது அதற்குள் கிரனேட் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து படைத்தரப்பினர் மற்றும் கண்ணிவெடியகற்றும் பிரிவினருக்கு மக்கள் உடனடியாக அறிவித்ததையடுத்து அங்குவிரைந்த அவர்கள் கண்ணிவெடியகற்றும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வாரமளவில் இப்பகுதியில் பாதுகாப்புக்கு அபாயகரமான வெடிபொருள்கள் நிலத்தடியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--