Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி நாகேந்திரபுரம் கிராம மக்களில் 45 குடும்பங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனால் உடுபுடைவைப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புளியம் பொக்கனையில் உள்ள நாகேந்திரபுரம் பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், கிராமத்தின் மாதர்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் குறித்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கணவனை இழந்த, தாய் தந்தையரை இழந்த மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கென உடுபுடைவைப் பொதிகள் சுரேஷ் பிரேமச்சந்திரனால் வழங்கப்பட்டன.
காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் இன்மையால் மீள்குடியேற்றத்திற்கென தாம் சென்றபோதிலும், தமக்கு வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இதன்போது அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகேந்திரபுரம் பாடசாலையில் எண்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவருகின்ற நிலையில் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்தனர்.
இப்பகுதி முன்பள்ளிச் சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு முன்பள்ளியைப் புனரமைப்பதற்கென 50 ஆயிரம் ரூபா காசோலையை அவர்களிடம் வழங்கியதுடன், முன்பள்ளி ஆசிரியருக்கு மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா வீதம் ஒருவருடத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து கொடுப்பனவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
01 Jul 2025