Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்களுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர் என்று குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
30 வைத்தியர்கள்வரையில் கடமையாற்றவேண்டிய இந்த வைத்தியசாலையில் தற்போது 14 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். இந்நிலையில் பெரும் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்குத் தினமும் 700 பேர்வரை சிகிச்சை பெறவருவோரின் எண்ணிக்கை காணப்படுகின்றது. இந்நிலையில் 3 வைத்தியர்கள் மட்டுமே வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பலதரப்பட்டோரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
18 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
5 hours ago