Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார், பேசாலை, நடுக்குடா கடற்கரையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தின் தலைப்பகுதி மற்றும் கால் பகுதிகள் சிதைவடைந்த நிலையில் உள்ளதுடன் இதுவரையில் அந்த சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மன்னார், மூர் வீதி காட்டுப்பகுதியிலிருந்து எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago