Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் இருந்து தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சிலவற்றின் நடத்துனர்கள், பயணிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக மன்னார் தனியார் சங்க போக்குவரத்து சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னாரில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ்கள் சிலவற்றின் நடத்துனர்கள் இளம் பெண்களிடம் பயணச் சீட்டின் பின்புறத்தில் காதல் வார்த்ததைகள் மற்றும் தமது தொலைபேசி இலக்கங்களையும் எழுதிக் கொடுத்து தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு கூறுகின்றார்கள் என முறையிடப்பட்டுள்ளது.
சில இளம் பெண்களிடம் பயணச்சீட்டினை கொடுத்து விட்டு மீதிப்பணத்திணை அப்பெண்களிடம் கதைத்து தொலைபேசி இலக்கத்தை பெற்றப்பின்னரே வழங்குவதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. \
இது தொடர்பாக சங்கத்தின் அடுத்த கூட்டத்தில் ஆராயப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
11 minute ago
16 minute ago
19 minute ago
24 minute ago
xlntgson Thursday, 30 September 2010 09:37 PM
திருமணமாகாத இளைஞர்களாக இருந்தால் 'உன்னை நான் காதலிக்க விரும்பவில்லை'. என்று மீதிக்காசோடு அதிலேயே எழுதி திருப்பி அனுப்பலாம். திருமணமானவர்களாக இருந்தால் அவர்களது மனைவியரை தேடிபிடித்து ஒப்படைக்க பொலீஸ் உதவியை நாடலாம். இதெல்லாம் வழக்காகி படிப்பு கெட்டு நீதிமன்றுக்கு அலையும் விடயம் அல்ல. காதலுக்கு ஒரு வடிகால் தேவை தான். ஆனால் கொலையிலோ தற்கொலையிலோ முடிவடையக்கூடாது. விளையாட்டு ஆசிரியையை சுட்டு, தன்னையும் சுட்டுக்கொண்ட ஒருவர் போல. உன்னை காதலிக்க விருப்பமில்லை என்று சொன்னாலும் துரத்துகிறவர்கள்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
19 minute ago
24 minute ago